வைரஸ் உருமாற்றங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு - Sri Lanka Muslim

வைரஸ் உருமாற்றங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு

Contributors

உலகம் முழுவதும் கொவிட்-19 வைரஸ், புதிய புதிய வகையில் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸின் புதிய உருமாற்றத்தைக் கண்காணிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாக அந்த அமைப்பு கூறியது. தொற்று நோய் இயல் கண்காணிப்பு, பரிசோதனை முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன.

உலக அளவில் வைரஸின் உருமாற்றத்தைத் தெரிந்து கொள்ள பிராந்திய அளவிலான அலுவலகங்களுடன் பணியாற்றி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வகை வைரஸை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவையா என்பதை விஞ்ஞானிகள் மும்முரமாய் ஆராய்ந்து வருகின்றனர்

Web Design by Srilanka Muslims Web Team