ஸபர் மாத தலைபிறை பார்க்கும் மாநாடு - கொழும்பு பெரிய பள்ளிவாசல் - Sri Lanka Muslim

ஸபர் மாத தலைபிறை பார்க்கும் மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Contributors

கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1435 ஸபர் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (3) செவ்வாய் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள்,

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியா, தக்கியா, மேமன் ஹனபி பள்ளிவாசல், ஷரீஆ கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர்.

மஃரிப் தொழுகையின் பின் ஸபர் மாதத்தின் தலைபிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது  011-5234044, 2432110,  011-2390783, 0777 366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அறியத் தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.

Web Design by Srilanka Muslims Web Team