ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபாவாக அதிகரிக்கும்! - Sri Lanka Muslim

ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபாவாக அதிகரிக்கும்!

Contributors

ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபாவாக அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளாலும், அண்மைக் காலமாக அதிகரிக்கப்பட்ட (vat) வரிகள்  காரணமாகவும் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை விரைவில் ரூ.80,000 முதல் ரூ.90,000 என்ற வரம்பை எட்டும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பருவ காலத்தில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே சமயம், கைத்தொலைபேசி உபகரணங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், நுகர்வோர் கையடக்கத்தொலைபேசி கொள்வனவை தவிர்த்து வருகின்றனர்.

இதனால், பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நாட்களில் கொள்வனவாளர்கள் வராத நிலையில் தமது வர்த்தக நிலையங்கள் இருப்பதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team