ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகான வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி - Sri Lanka Muslim

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகான வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி

Contributors
author image

S.Ashraff Khan

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்குமாகாண வருடாந்த கராத்தே சுற்றுப்போட்டி (24) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது.

ஆறு வயதிலிருந்து 13 வயது வரையான சிறுவர்கள், 14/15 வயதுடைய கடெட் பிரிவு, 16/17 வயதுடைய ஜூனியர், 21 வயதுக்கு கீழ்பட்டவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட சீனியர் என அனைத்து பிரிவினர்களுக்கிடையிலான காத்தா, குமிடே, குழு காட்டா ஆகிய நிகழ்ச்சிகள் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் ஆகிய இடங்களை பெற்ற மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_1527441214932 MG_1527440693381 MG_1527441225429

Web Design by Srilanka Muslims Web Team