ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயார் – சிராஸ் ! - Sri Lanka Muslim

ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயார் – சிராஸ் !

Contributors

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடாக செயற்படவில்லை என தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீரா சாய்பு முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரில்லை என கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கைக்கு அமைய தான் மேயர் பதவியில் இருந்து விலக போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பதவியில் இருந்து விலக்க தலைவர் ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் பொழுது அதனை தோற்டிகத்து சிராஸை பதவியில் இருந்து அகற்றுமாறு ஹக்கீம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 11 ஆளும் கட்சி உறுப்பினர்களில் 5 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் உட்பட ஆறு பேர் தனக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் சிராஸ் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team