ஹஜ்ஜுக்கு அனுப்ப பணத்தை வாங்கிவிட்டு சில முகவ்கள் ஏமாற்றியுள்ளனர் – அமைச்சர் பெளசி ! - Sri Lanka Muslim

ஹஜ்ஜுக்கு அனுப்ப பணத்தை வாங்கிவிட்டு சில முகவ்கள் ஏமாற்றியுள்ளனர் – அமைச்சர் பெளசி !

Contributors

6d3ab-download28629

இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் செல்லும் இறுதி ஹஜ் குழு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தலைமையில் 09-10-2013 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

 இம்முறை ஹஜ் கடமைக்காக 2240 பேர் இலங்கையிலிருந்து சென்றுள்ளனர்.
இதேவேளை, ஹஜ் செல்வதற்காக சில முகவர்கள் பணம் அறவிட்டு கடைசி நேரத்தில் ஹஜ் செல் வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தால் சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளசி மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team