ஹஜ் புனித பயணம நெரிசலில் சிக்கி பலியானவர்கள் 2411 என அசோசியேட் பிரஸ் தகவல் - Sri Lanka Muslim

ஹஜ் புனித பயணம நெரிசலில் சிக்கி பலியானவர்கள் 2411 என அசோசியேட் பிரஸ் தகவல்

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

 

புதுடெல்லி, டிச. 10-

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணமும் ஒன்று ஆகும்.இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு இருந்தனர். செப்டமபர் 24 ந்தேதி மெக்காவுக்கு அருகே உள்ள மினா நகரில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்ற போது திடீரென்று நெரிசல் ஏற்பட்டது இதில் சிக்கி ஆயிரகணகானவர்கள் பலியானார்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட 2-வது மோசமான விபத்து இது ஆகும். 1990-ம் ஆண்டு ஜூலை மாதம் மெக்கா அருகே உள்ள அல்-முசீம் குகைப்பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1,426 யாத்ரீகர்கள் உயிர் இழந்தனர். அதன்பிறகு இப்போது மினாவில் நடந்த நெரிசலில் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நெரிசலில் சிக்கி 769 பேர் இறந்ததாக சவுதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது 2411 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இறப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதை 3 மாதங்களுக்கு பிறகு சவுதி அரசு அதிகாரிகளும் ஒப்புகொண்டு உள்ளனர்.என அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டு உள்ளது.

தனது பிராந்தியத்தில் போட்டி நாடான ஈரானின் விமர்சனத்தை ஏற்காமல் மற்ற நாடுகளின் முயற்சிகளோடு மரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் மிகவும் பாதிக்கபட்டது ஈரான் ஹஜ் பயணிகள் தான் 464 ஈரானை சேர்ந்தவர்கள் பலியானார்கள். மாலி நாடு தனது நாட்டைச் சேர்ந்த முஸ்லீம்கள் 305 பேர் பலியானதாக கூறி உள்ளது. நைஜிரீயா நாடு 274 பேரும் எகிப்து 190 பேரும் பலியானதாக கூறி உள்ளது.

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் 137 பேரும், இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் 129 பேரும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 120 பேரும், கேமரூனை சேர்ந்தவர்கள் 103 பேரும், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் 102 பேரும்,நிஜரை சேர்ந்தவர்கள் 92 பேரும், செனகலை சேர்ந்தவர்கள் 61 பேரும், எத்தோப்பியாவைச் சேந்தவர்கள் 53 பேரும், ஐவரி கோஸ்டை சேர்ந்தவர்கள் 52 பேரும், பெனனியை சேர்ந்தவர்கள் 50 பேரும், அல்ஜிரியாவை சேர்ந்தவர்கள் 46 பேரும் மேலும் சாட்-43, மொராகோ-42, சூடான்-30,தான்சானியா-25, புர்கினா பாசோ-22, கென்யா-12,சோமாலியா10, கானா, துனிசியா,துருக்கி தலா 7 பேர் லிபியா மியான்மர்-6 சீனா-4 ஆப்கானிஸ்தான், திஜிபோடி காம்பியா,ஜோர்டான் தலா- 2பேர், லெபனான்,மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தலா 1 பேரும் பலியானவர்களில் அடங்குவர். என தகவல் வெளியிட்டு உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team