ஹஜ் முகவர் சங்கத்தின் 34ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்! - Sri Lanka Muslim

ஹஜ் முகவர் சங்கத்தின் 34ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்!

Contributors

ஹஜ் முகவர் சங்கத்தின் 34 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம், அதன் தலைவர் இஸாம் கௌஸ் தலைமையில், ஹம்பாந்தோட்டை ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பெருமளவு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த சில வருடங்களாக கொவிட் 19 காரணமாக உலகளாவிய ரீதியில் தடைப்பட்டிருந்த ஹஜ் மற்றும் உம்ரா செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்ைக மேற்கொள்ளப்படுகின்ற இச்சந்தர்பத்தில் இம்முறை அங்கத்தவர்கள் ஆர்வமாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கிறாத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நடப்பு வருட புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. யாப்பின் பிரகாரம் தலைவர் இரண்டு வருடகாலத்திற்கு நியமிக்கப்படுவதனால் தலைவரை தவிர ஏனையோர் அங்கத்தவர்களினால் தெரிவு செய்யப்பட்டனர். உதவித் தவைர்களாக எம், ஆர், எம், பாருக், அஹமட் நிஜார், செயலாளர் எம். ஓ. எப். ஜெஸீம், உதவிச் செயலாளர் சப்ராஸ் சாதியா, பொருளாளர் எம். ஜே. எ. குவாப்டீன், உதவி பொருளாளர் எம்.எப். என். எம். உஸாமா

நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

எ. சீ. எம். கரீம், எம். ஐ. எம். நௌபர், சலீம் இப்ராஹிம், ஏ. அமானுல்லா, எம். எ. எம். அஸ்கர், எம். எப். எம். பஸீம், அவ்ன் அவ்ப், எ. பீ. நுஹ்மான்.

ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் இஸாம் கௌஸ் இங்கு உரையாற்றும் போது “கடந்த சில வருடங்களாக தடைப்பட்டிருந்த எமது சேவைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை புனித ஹஜ் கடமைக்காக சவூதி அரேபிய அரசாங்கம் 1580 யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கி இருந்தும் இம்முறை 980 பேர் மாத்திரமே புனித யாத்திரையில் கலந்து கொண்டனர்.

இவர்களை அனுப்புவதற்கு எமக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அன்ஸார் இப்ராஹிம் மற்றும் அதிகாரிகளும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

இதனால் இவர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சகல உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team