ஹபுகஸ்தலாவை : சகோதரர் இஸ்மாயில் ஹனீபா அவர்களது மறைவு கவலையளிக்கிறது - Sri Lanka Muslim

ஹபுகஸ்தலாவை : சகோதரர் இஸ்மாயில் ஹனீபா அவர்களது மறைவு கவலையளிக்கிறது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Masihudeen Anasullah


ஹபுகஸ்தலாவை அல்ஹாஜ் ஆர்பீன், அல்ஹாஜ் மஸூத், ஆகியோரது சகோதரரும் அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவருமான சகோதரர், இஸ்மாயில் அவர்கள் கொழும்பில் காலமானார்கள்.

இவர் ஹபுகஸ்தலாவையில் வாழ்ந்த காலப்பகுதியில் கிராமத்தின் முன்னேற்றம் கருதி செயற்பட்டவராவார்.

பாடசாலை அபிவிருத்தி சங்கம், பள்ளிவாயல் நிர்வாக சபைகள் போன்றவற்றிற்கு சிறந்தவர்கள் தெரிவுசெய்யப் படவேண்டும் என்பதில் நண்பர்களுடன் இணைந்து அக்கறையுடன் செயற்பட்டார்.

(1987ம் வருட காலப் பகுதியில் ஹபுகஸ்தலாவை இளைஞர் கழக அங்கத்தவர்கள் சகிதம் மாலைநேர விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம்- “முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வந்திருப்பதாகவும் அவசர கலந்துரையாடல் கூட்டமொன்றை நடத்த பிரமுகர் விரும்புவதாகவும் கூறி என்னை அவசரமாக அழைத்துச் சென்றார்.” மஸ்ஜிதுல் மின்ஹாஜ் அப்போதைய தக்கியா வெளி கட்டடத்தில் சிறிய கூட்டமொன்றை நடத்தினோம். அப்போது தெரிவு செய்யப்பட்ட கட்சிக் கிளையில் எனது விருப்பைக் கேட்காமலே தலைவராகவும் என்னை வழியுறுத்திப் பிரேரித்தார். அன்று வருகை தந்த பிரமுகர் தலைவர் அஷ்ரப் அவர்களும் ஹிஸ்புல்லாஹ் அவர்களுமாகும்.)

என்னையும் நண்பர்கள் பலரையும் சமூகப்பணிகளுக்கு தூண்டி ஆலோசனை வழங்கிய முக்கிய நபர்களில் ஒருவர் இஸ்மாயில் நாநா என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

Dr,கலீல் அவர்களது செயளாளராகவும்
கடமையாற்றிய அவர் கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதிகளில் ஊர் நிலைமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி தொலைபேசியினூடு கலந்துரையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

நேர்மையும் சமூகம் பற்றிய தூர நோக்கும் உடைய இஸ்மாயில் நாநாவுக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலான ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்குவானாக!

துயருட்டிருக்கும் அவரது மனைவி பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களுடன் கூடிய பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

Web Design by Srilanka Muslims Web Team