ஹலால் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை – ஞானசார தேரர் ! - Sri Lanka Muslim

ஹலால் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை – ஞானசார தேரர் !

Contributors

ஹலால் பிரச்சினை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஹலால் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டன. அந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தற்பொழுது அமுல்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அந்த பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கங்களுக்கு அமைய அவை செயற்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு ஹக்கீமின் பாடங்கள் அவசியமில்லை. ஹக்கீமை விட நாட்டையும் நாட்டு மக்கள் பற்றியும் பொதுநலவாயம் குறித்தும் எமக்கு நன்றாக தெரியும்.
நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லவே நாங்கள் இவற்றை செய்து வருகிறோம். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு முன்னர் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்தது என்றார்.
நாட்டிற்குள் ஹலால் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பபட்டு வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தமாக பகிரங்கமான விவாதம் ஒன்று அவசியம் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவித்திருந்தார்.
கண்டி மய்யாவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே ஞானசார தேரர் இதனை மேற்கண்டவாறு கூறினார

Web Design by Srilanka Muslims Web Team