ஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான் - Sri Lanka Muslim

ஹஸன் அலி MPயின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்

Contributors
author image

ஊடுருவி

ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடித்தும் குரல் கொடுத்தும் வந்த முகா செயலாளர் நாயகம் ஹசன் அலி – தனது அந்த இறுக்கமான கொள்கையிலிருந்து திடீர் என்று தளர்வுப் போக்கை மேற்கொண்டு ள்ளதாகக நம்பகரமாக தெரியவருகின்றது.

 

அரசின் முக்கிய புள்ளிகளுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு பின்னர் இடம்பெற்ற விஷேட சந்திப்பை அடுத்தும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சு வார்த்தையும் அடுத்தே இத்தளர்வு ஹஸன் அலிக்கு ஏற்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
இதன் படி – மு.கா செயலாளர் நாயம் என்ற ரீதியில், அவர் கட்சியில் வகிக்கும் குறித்த பதவியை கருத்தில் கொண்ட அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவது குறித்து பேச்சு நடத்தியுள்ளது.
இதில் திருப்த்தி அடைந்து கொண்டதன் வெளிப்பாடே மேற்படி தளர்வு போக்குக்கு காரணம் என தெரியவருகினறது.

 

ஹஸன் அலியின் மாற்றத்திற்கான பின்னணி இதுதான்-
கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியான ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஹஸன் எம்பி – ‘ ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமுகத்தின் மனக்குறையை போக்கக் கூடிய பொதுவான ஒரு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவே முகா தயாராக உள்ளது. அரசுக்கு ஒருபோதும் முகா ஆதரவளிக்காது’ என குறித்த ஆங்கில இதழுக்கு வழங்கிய செவ்வியில் ஹஸன் அலி எம்பி குறிப்பிட்டிருந்தார்.

 

இதனை அவதானித்த அரசும் தலைவர் ஹக்கீமும் ஹஸன் அலியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து – ‘தான் அவ்வாறு ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனக் கூறியும் இது ஒரு திருவுபடுத்தப்பட்ட செய்தி என்றும் தனது மறுப்பறிக்கையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

 

.இதன் பின்னர் ஹஸன் அலியுடன் தொடர்பு கொண்ட ரவூப் ஹக்கீம் ‘கட்சி , மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஒருபோதும் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது எவ்வாறு உங்களால் அவ்வாறு கூறமுடியும் அரசுக்கும் எனக்கும் உங்கள் கருத்து குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதன் பிற்பாடே அரசு ஹசனலியுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளமையும் அவருக்கு சில சலுகைகளை வழங்க முன்வந்தமையும் அதனை ஹஸன் அலி ஏற்றுக்கொண்டமையும் இதன் பின்னணி ஆகும்.

 

இது இவ்வாறு இருக்கத்தக்க நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த நாட்களாக காத்து வரும் மௌனம் மகிந்தவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளமையை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கடந்த காலங்களில் முஸ்களுங்களுக்கு எதிராக இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவங்களின் போதெல்லாம் ஆக்ரோசமாக துள்ளியெழுந்த ரவூப் ஹக்கீம் இந்த அரசையும் ஜனாதிபதயையும் கடும் தொணியில் விமர்சித்து இருந்தார்.

 

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடக்கம் ஊவா மாகாண சபைத் தேர்தல் வரை ஹக்கீமின் அரசுக்கு எதிரான முழக்கம் மிகக்கடுமையாக இருந்தது. ஆனால் அந்த முழக்கத்தின் ஒரு துளி கூட இன்று ஹக்கீமிடம் இல்லை. மாறாக முழுக்க முழுக்க மௌனமே காணப்படுகின்றது.

 

; அரசைவிட்டு வெளியேறும் நோக்கம் ரவூப் ஹக்கீமுக்கு உண்மையில இருக்குமாக இருந்தால் என்றோ அரசை விட்டு வெளியேறியிருப்பார்: இல்லையேல் அழுத்கம சம்பவத்தின் பின்னராவது வெளியேறியிருப்பார்: அதுவும் இன்றேல் மியன்மார் பௌத்த பிக்குவான அசின் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்து முஸ்லிம்களை கொச்சைப்படுத்திய போதாவது வெளியேறியிருப்பார். இதன் மூலம் ஹக்கீம் அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பது நிரூபணமாகின்றது.

 

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2001ம் ஆண்டு ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் இருந்தபோது பெறுமதிமிக்க அமைச்சுப்பதவி தராததற்காக ஒருநாள் காலக்கெடு விதித்து ஹக்கீம் வெளியேறிது போன்று – அதை விட பெறுமதி மிக்க கரையோர மாவட்ட விடயத்தில் எதுவித காலக்கெடுவையும் விதிக்காமல் இன்றும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பது – நிச்சயம் அவர் இந்த அரசைவிட்டு வெளியேறமாட்டார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.

 

இவ்வாறான நிலையில் விரைவில் கட்சியின் உயர்பீடத்தை கூட்டவுள்ள தலைவர் ஹக்கீம் – அதில் தனக்கு சார்பாக உயர்பீட்த்தில் உள்ள பெரும்பாலானோரை தனக்கு சார்பாக – அரசுடன் தொடர்ச்சியாக இருக்குமாறும் – மகிந்தவுக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களை கூறவைத்து முஸ்லிம்களின் எதிர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஹக்கீம் திட்டம் தீட்டி முயற்சித்து வருவதாக நம்பகரமான தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

இந்த திட்டத்திற்குள் தான் தற்போது ஹஸன் அலி எம்பியும் – அரசின் அற்ப சலுகைகளுக்கு அடிபணிந்து மீள்நுழைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team