ஹஸீரின் விதைப்பின் அறுவடையை ஹக்கீம் விரைவில் கிழக்கில் பெற்றுக்கொள்வார்; இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அப்னான்…! - Sri Lanka Muslim

ஹஸீரின் விதைப்பின் அறுவடையை ஹக்கீம் விரைவில் கிழக்கில் பெற்றுக்கொள்வார்; இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அப்னான்…!

Contributors

முஸ்லிம் காங்கிரஸ் என்பது வடக்கு,கிழக்கு மக்களின் அரசியல் சொத்து. மாமனிதர், பெருந்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களால் கிழக்கிலிருந்து கருவுற்று, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்காக வளர்க்கப்பட்ட மக்கள் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். பெருந்தலைவரின் மரணத்திற்கு பின் சின்னாபின்னாமாக்கப்பட்டு, குரங்கின் கையில் கையில் கிடைத்த பூ மாலை போல “டீலர் குடும்பத்தின்” கையில் மாட்டிக் கொண்டுள்ளது மு.கா கட்சி.

கிழக்கு மக்களின் வாக்குகளை மூலதனமாகக் கொண்டு இயங்கும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ். அவ்வாறு கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் மக்களை கீழ்தரமான வார்த்தை பிரயோகத்தை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் சகோதரர் பதிவிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்த விடயமாகும். கட்சியின் சுகபோகங்களை அனுபவதித்துக் கொண்டிருக்கும் உங்கள் குடும்பமானது எங்களது வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வார்த்தையாலும், செயற்பாடுகளாலும் கெளரவப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பிரதேசவாதத்தினை குறித்து நிற்பது தவறான விடயமாகும்.

எங்களுடைய கிழக்கு மக்கள், உங்கள் சகோதரரை மு.கா கட்சி “தலைவராக” ஏற்றுக் கொண்ட மக்கள். உங்கள் தலைவர் செய்யும் அரசியல் துரோகங்களை மறந்து மீண்டும் மீண்டும் “அரியணை ஏற்றுவது” எம் மக்கள். உங்கள் உணர்ச்சியூட்டும் வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாற்றப்பட்ட மக்கள். ஆனால், உங்களின் கடந்த கால பிரதேச வாத வெறிக்கு நூறு சதவீத பதில் வழங்குவார்கள்.வடக்கு,கிழக்கு மக்கள் என்றுமே கண்டித் தலைவன் என்று வஞ்சியதும் இல்லை, ஏளனம் செய்ததும் இல்லை. எங்கள் மக்கள் அப்பாவி என நினைத்துக் கொண்டிருக்கும் உங்கள் சுயலாப குடும்ப அரசியலுக்கு தக்க பதில் சரியான நேரத்தில் வழங்கப்படும்.

கிழக்கு இளைஞர்கள் இல்லையென்றால் பெருந்தலைவரால் பாரிய புரட்சியாக இக் கட்சியை ஆக்க முடிந்திருக்காது. அழிக்க வந்த உங்கள் குடும்பத்திற்கு இவ் இளைஞர்கள் கேள்வி கேட்காதவர்கள் போலவே தெரியத் தோன்றும். இன்று முதல் வடக்கு,கிழக்கு இளைஞர்களின் ஆக்கிரோஷமான பதில்கள் உங்கள் குடும்பத்திற்கு வந்து சேரும். மனிதன் தவறுகள் செய்ய முடியும் என்பதால், உங்களுக்கு இறுதியும் அறுதியுமாக வாய்ப்பொன்றை வழங்குகின்றோம். தயவு செய்து “கிழக்கு மக்களிடம் மன்னிப்பு கோருங்கள் “ பெருந்தன்மையோடு மன்னிக்கின்றோம். வயதிற்கு ஏற்றால் போல் நாகரீகமான முறையில் மக்களை தொடர்பு கொள்ளுங்கள்.

அமீர் அப்னான்,
இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்,
இலங்கை.

Web Design by Srilanka Muslims Web Team