ஹிஜாபுக்கு அனுமதி வழங்கி சர்ச்சைக்கு முடிவு காண வேண்டும்! - Sri Lanka Muslim

ஹிஜாபுக்கு அனுமதி வழங்கி சர்ச்சைக்கு முடிவு காண வேண்டும்!

Contributors

முஸ்லிம் சமூகங்களில் பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் அடக்கமான ஆடைகளை அணிந்து, தலைமுடியை மறைக்கும் ஆடைகளை அணிந்து வருகின்றனர். இது ஒரு புரட்சிகர அணுகுமுறையோ அல்லது கடுமையான மதவாதச் செயலோ அல்ல. தீய மனிதர்களின் தேவையற்ற வர்ணனைகள், பார்வைகள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், சுயமரியாதையைப் பாதுகாக்கவும் முஸ்லிம் பெண்கள் இந்த ஆடையை அணிந்து கொள்கின்றனர்.

இயந்திர யுகத்தின் தொழில் மயமாக்கலுக்கு முன்னர் ஒரு நாகரிகமான முறையாக இருந்தது அது. இந்தியாவின் சில பகுதிகளில் இந்துப் பெண்கள் பாரம்பரியமாக ‘கூங்காட்’ எனும் முக்காட்டை அணிந்து வருகின்றனர். அதாவது -பொது இடங்களில் தலையை மூடும் ஒரு வழக்கம் – இன்றும் கிராமப்புறங்களில் உள்ளது. இந்த நடைமுறை பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

இது பெண்களின் தனிப்பட்ட விருப்பமாகும். மேலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கல்வியைத் தொடரும் போது அல்லது வேலை செய்யும் போது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி பாதுகாக்க அவர்கள் விரும்புகின்ற ஆடைத் தெரிவாகும். மேலும் இது ஆற்ற வேண்டிய எந்தவொரு சமூகப் பொறுப்புக்கும் ஒரு தடையாக இருப்பதில்லை.

இந்த மறுக்க முடியாத உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சமீபத்தில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்கள் (முஸ்லிம் பெண்கள்) வகுப்புகளுக்கு வருவதைத் தடை செய்வதற்கான தவறான நடவடிக்கை, கடந்த சில காலமாக அராஜகவாத சக்திகளால் அரசியலாக்கப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல தசாப்தங்களாக நிர்வாக மற்றும் அரசாங்க இயந்திரங்களில் இந்தக் கும்பல் ஊடுருவி இஸ்லாமிய வெறுப்பின் சூழலை உருவாக்கியுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கல்லூரியின் அதிகாரிகளைப் பொறுத்தவரை, கல்வி மையங்களில் ஹிஜாப் மீது பிரான்ஸ் நாட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்தான் அவர்கள் தங்களை ஏமாற்ற அனுமதித்ததா அல்லது வெறுப்புணர்ச்சியை தூண்டும் அரசியல்வாதிகளால் இது போன்ற தவறான முடிவை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையானது கட்டுப்பாட்டை மீறி நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளது.

இந்தியா எந்த நிலத்திலும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பல்மொழி நாடாகும். இது முந்நூறு மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையிலான மற்றும் தேசிய மக்கள் தொகையில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மற்றைய 75 சத வீதம் இந்து பெரும்பான்மை மற்றும் இவர்களில் கோடிக்கணக்கான தலித்துகள் அடங்குவர். மற்றும் பல மில்லியன் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் உட்பட பல்வேறு மதங்களை பின்பற்றுவோரும் உள்ளனர்.

இது பல்வேறு மதங்கள், பிரிவுகள், கலாசாரங்கள், மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு இடையே வேற்றுமையில் ஒற்றுமை காணும் சகோதரத்துவ உணர்விற்கான பிரபலமான தேசமாகும். அதன் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அதன் ஸ்தாபகத் தந்தைகளான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களின் அகிம்சை பங்களித்துள்ளது.

எனவே வரலாற்றை மறந்த இன்றைய அரசியல்வாதிகள், எதிர்மறையான சொற்களை பரப்புவதன் மூலம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் பிரச்சினையை உருவாக்கி நீதிமன்றங்களுக்கு இழுப்பதன் மூலமாக தேசிய ஒற்றுமையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நலன்களுக்காக எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான நடவடிக்கை என்னவெனில், கல்லூரி அதிகாரிகளின் இந்த விவேகமற்ற முடிவை ரத்து செய்து, ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களை வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதாகும். அதன் மூலம் சர்ச்சையை முளையில் கிள்ளி எறிய வேண்டும். தீயவர்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

 

தாஹா முஸம்மில்

Web Design by Srilanka Muslims Web Team