ஹூனைஸ் எம்பி அரசாங்கத்துடன் மீண்டும் இணைவு? - நடந்தது இதுதான்! - Sri Lanka Muslim

ஹூனைஸ் எம்பி அரசாங்கத்துடன் மீண்டும் இணைவு? – நடந்தது இதுதான்!

Contributors
author image

ஊடுருவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ஐ,தே.க வுக்கு பல்டி அடித்த ஹூனைஸ் பாறுக் எம்பி ,மீண்டும் அரசுடன் இணைய முயற்சித்து வருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

 

இது தொடர்பில் அரசின் முக்கிய சிலருடன் ஹூனைஸ் எம்பி இரகசியப் பேச்சு நடத்தும் விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

 

ஐ.தே.க வுடன் இணைவதற்காக இவர் நடத்திய பணம் தொடர்பான பேரப்பேச்சு வாக்குறிதியளித்த படி இடம்பெறாததை அடுத்தே மீண்டும் அவர் அரசுப் பக்கம் தாவுவதற்கான காரணம் என நம்பகரமாக தெரியவருகின்றது.

 

ஐ.தே.க வில் இணைவதற்காக 15 தொடக்கம் 30 கோடி ரூபா வரை இவர் பேரப்பேச்சில் ஈடுபட்டிருந்தார் என ஐ.தே.க தரப்பை மேற்கோள் காட்டி இரு முக்கிய நபர்கள் எமது இணையத்தளத்திற்கு தகவல் அளித்திருந்தனர்.

 

எனினும் இந்த அளவான தொகையை தருவதாக ஒத்துக்கொண்ட ஐ.தே.க, ஹூனைஸை தம்பக்கம் இழுத்தும் கொண்டது. எனினும் அக் குறித்த தொகையை வழங்குவதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந் இழுபறிக்கு காரணமாக குறித்த தொகையை வழங்கும் அளவுக்கு ஹூனைஸ் எம்பியிடம் மக்கள் செல்வாக்கோ ,வாக்கு வங்கியோ இல்லாமையே காரணம் என கூறப்படுகின்றது.
ஐ.தே.கவின் சில உறுப்பினர்கள் ஹூனைஸ் எம்பியின் வாக்கு வங்கியை அறியாததன் காரணமாக அவர் கேட்ட தொகையை வழங்குவதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டனர்.

 

ஆனால், ஐ.தே.கவின் உயர்மட்ட தலைமைகள் இந்தளவு தொகை வழங்குமளவுக்கு ஹூனைஸ் எம்பி;க்கு வன்னியில் செல்வாக்கு இல்லை எனக் கூறி குறித்த தொகையை வழங்க மறுதலித்து விட்டது.

 

இதன் பிற்பாடு இடம்பெற்ற சமரசப் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியடைந்ததை அடுத்து சில கோடிகளை வழங்க ஐ.தே.கவின் உயர் தலைமைகள் முன்வந்தன.

 

இதற்கு ஹூனைஸ் எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தான் ஏமாற்றுப்ட்டதையும் உணர்ந்ததன் எதிரொலியே மீண்டும் அரசின் பக்கம் வருவதற்கான பேரப் பேச்சில் அவர் ஈடுபட முனைந்தார் என அரச தரப்பு பிரமுகர் ஒருவர் நம்பகரமாக சுட்டிக் காட்டினார்.

 

ஹூனைஸ் எம்பி மீண்டும் அரசில் இணைவதற்கான தூதை , அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறி மாறி தரகர் வேலை பார்ப்பதில் பரீட்சயமான மின்னலானவர் முன்வந்துள்ளார்.

 

இதற்கமைய தரகர் வேலையை ஆரம்பித்த மின்னலானவர் நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஜனாதிபதிக்கு மிகமும் நெருங்கிய உறவு முறையான ஒருவருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

 

இந்த பேச்சின் அடிப்படையில் ஹூனைஸ் எம்பி கேட்டுக்கொண்டவாறு ‘ ஐ.தே.க தருவதாக வாக்குறுதியளித்த கோடிகளை (குறித்த கோடிகளை ஹூனைஸ் எம்பிக்கு வழங்குவதற்கு ஐ,தே.க மறுத்ததை மறைத்துவிட்டு) தரவேண்டும் மற்றும் பிரதியமைச்சர் பதவியும் தரவேண்டும்’ என்று ஹூனைஸ் எம்பியின் கோரிக்கையை மின்னலானவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

 

அதே நேரம் , அரசின் முக்கிய அமைச்சர் இருவரை தொடர்பு கொண்ட ஹூனைஸ் எம்பி மேற்படி இரு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

 

ஹூனைஸ் மீண்டும் அரசுக்குள் வருவதற்கான இப்பேரப்பேச்சை நன்கு செவிமடுத்த ஜனாதிபதிக்கு நெருக்கமான உறவினரும் மற்றும் அமைச்சர்களும் உடன் நேபாளத்திலிருந்த ஜனாதிபதிக்கு எத்திவைத்தனர்.

 

இதன்படி ஹூனைஸ் எம்பியை மீண்டும் அரசுக்குள் எடுப்பது தொடர்பிலும் அவர் கேட்கும் பணம் மற்றும் பதவியை வழங்குவது தொடர்பிலும் அடுத்த ஒரு வாரத்தின் பின் கலந்துரையாட குறித்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர் என அரச தரப்பு தகவல்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகின்றது.

 

இது இவ்வாறிருக்க அரசுடன் அவர் பேரப்பேச்சில் ஈடுபட்டிருப்பது ஐ.தே.கவுக்கு தெரியப்படுத்தாமல் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

எனினும் இத் தகவலை அரசின் பிரமுகர் ஒருவர் ஐ.தே.க உயர் தலைமைகளுக்கு எத்திவைத்துள்ளதாக மறுபக்கம் அறிய வருகின்றது.

 

இந்நிலையில் – ஹூனைஸூக்கு தரகர் வேலை பார்க்கும் மின்னலானவருக்கு தெரியப்படுத்தாமலேயே ஹூனைஸ் எம்பி ஐ.தே.க பக்கம் பல்டி அடித்தார் என்பது மின்னலானவர் மூலமாகவே தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

 

ஹூனைஸ் எம்பி ஐ.தே.க வுக்கு பல்டி அடித்த செய்தி வெளியாகிய மறுநிமிடம் மின்னலானவர் தான் பகுதி நேரமாக பணியாற்றும் தனது தொலைக்காட்சி செய்தி அறைக்குள் ஆவேசமாக சென்று ‘ஹூனைஸ் மாறப்போகின்றார் என்ற செய்தி உங்களுக்கெல்லாம் கிடைத்தும் அதனை ஏன் நீங்கள் என்னிடம் சொல்ல வில்லை’ என தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் சீறிப்பாய்ந்துள்ளார்.

 

அரசில் பிரதியமைச்சர் பதவியை பெற்றுத் தருமாறு கடந்த 06 மாதங்களாக என்னிடம் கெஞ்சித்திரிந்த ஹூனைஸ், இப்போது பணம் என்றதும் என்னை மறந்து செயற்பட்டுள்ளார் என்றும் தனக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வேதனைப்பட்டுமுள்ளார்.

 

இவ்வாறெல்லாம் ஹூனைஸ் எம்பியால் வேதனையை அனுபவித்த மின்னலானவர் தற்போது அதே ஹூனைஸூக்கு தரகர் வேலை பார்ப்பதன் மர்மம்தான் என்ன? பணம் பத்தையும் செய்யும் என்பது இதைத்தானோ!

 

இச் செய்தி பதிவேற்றம் செய்யப்பட்ட இலங்கை நேரம் 8 மணி வரை ஹூனைஸ் பாறுக்கின் முகநூலில் ஐ.தே.தவுக்கு கட்சி தாவியும் நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார். நாமலின் புகைப்படத்தை அகற்றாமல் பொதுபேட்பாளர் மைத்திரிபாலவுடன் ஹூனைஸ் எம்பி நின்றிருக்கும் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் அவதானிக்கலாம். இதுவே போதும் எமது ஆக்கத்தின் உண்மைத்தன்மைக்கு

இச் செய்தி பதிவேற்றம் செய்யப்பட்ட இலங்கை நேரம் 8 மணி வரை ஹூனைஸ் பாறுக்கின் முகநூலில் ஐ.தே.தவுக்கு கட்சி தாவியும் நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார்.
நாமலின் புகைப்படத்தை அகற்றாமல் பொதுபேட்பாளர் மைத்திரிபாலவுடன் ஹூனைஸ் எம்பி நின்றிருக்கும் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் அவதானிக்கலாம்.
இதுவே போதும் எமது ஆக்கத்தின் உண்மைத்தன்மைக்கு

Web Design by Srilanka Muslims Web Team