ஹூனைஸ் MP யின் நாடகம் - அம்பலத்திற்கு வரும் உண்மைகள் - Sri Lanka Muslim

ஹூனைஸ் MP யின் நாடகம் – அம்பலத்திற்கு வரும் உண்மைகள்

Contributors
author image

ஊடுருவி

அரசியல் உயர் அழுத்தம்!

தாமதத்திற்கு வருந்துகிறோம்.

வன்னி மாவட்ட அ.இ.ம.கா எம்.பி. ஹுனைஸ் பாறுக்
 முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் கடமையாற்றிய இவரை – அரசியலுக்குள் நுழைத், ஒரே தடைவையில் எம்பியாக்கிய பெருமை அ.இ.ம.கா தலைவர் ரிசாதையே சாரும். இது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

 

அரசியலில் உச்சிக்கு ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த அமைச்சர் ரிசாதுக்கும்; – ஹூனைஸ் எம்பி;க்கும் இடையில் மனக்கசப்பு, பிளவு என்ற பேச்சு கடந்த சில நாட்களாக உலாவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் – முஸ்லிம்களின்  தலைமையாக உருவாகியுள்ள ரிசாதை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் மின்னல் நடத்தும் ரங்காவின் பார்வையில், காதுகளில் மேற்படி இருவரினதும் மனக்கசப்பு என்ற செய்தி இனிப்பாக எட்டியது.

 

உடன் செயலில் இறங்கிய மின்னலானவர் , தனது நீணடநாள் கனவாக இருந்த அமைச்சர் ரிசாதை அழிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க ஹூனைஸ் எம்பியை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தார்;.

 

பிரான்ஸ் என்றும் லண்டன் ,மலேசியா என்றும் வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்திக் கொடுத்தும் மேலும் சில சலுகைகளை வழங்கியும் ஹூனைஸ் எம்பியை தனது கபடத்தனமான தாக்குதல்கள் மூலம் உள்வாங்கிக் கொண்டார்;.

 

ஹூனைஸ் எம்பியும் இந்த கபடத்தனத்திற்குள் சிக்கியும்; கொண்டார்.
ஹூனைஸின் மீது – மின்னலானவர்  கண்வைத்ததற்கு காரணம் இல்லாமலும் இல்லை .
முல்லைத்தீவில் நடந்த தேர்தல் சம்பவம் ஆகும். 2011ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட மின்னல் ரங்காவின் கட்சி வெறுமனே 56 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டமையை நாம் அறிவோம்.  இந்த படு தோல்விக்கு காரணம் முல்லைத்தீவு தமிழ் மக்கள் தமது வாக்குகளை  த.தே.கூட்டமைப்புக்கும் அமைச்சர் ரிசாதுக்கும் வழங்கியமை ஆகும்.  

 

தமிழ் மக்கள் முஸ்லிம் ஒருவர் தலைமையிலான அணிக்கு ஆதரவு வழங்கியதால் ஏற்பட்ட இனக்குரோதமும் தனது படுதோல்வியால் ஏற்பட்ட அவமானமுமே அமைச்சர் ரிசாதை பழிவாங்க அவர் முயற்சிப்பதற்கான காரணமாகும்.

 

இதற்கு அமைய ரிசாதை பழிவாங்க வேண்டும் என்ற நீண்டநாள் கனவுதான் இப்போது ஹூனைஸ் எம்பி மூலமாக அவரை பலவீனப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சி ஆகும்.

 
ஹூனைஸ் எம்பி மின்னலானவரின் வலையில் வீழ்ந்தது எப்படி?

 

பிரதியமைச்சர் கனவு ஹூனைஸ் எம்பியை நீண்டகாலமாக ஆட்கொண்டு வந்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்களுக்கும் – இளம் எம்பி மார்களுக்கும் இடையில் சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்று கொழும்பில் இடம்பெற்றது.இந்த போட்டிக்கு பி;ன்னர் ஐ.தே.க எம்பி ரவி கருனாநாயக்காவின் வீட்டில் விருந்து உபசாரம் ஒன்று இடம்பெற்றது.
இந்த விருந்தில் கலந்து கொண்ட மின்னலான ரங்கா, அங்கிருந்த நாமல் எம்பியை பார்த்து – ஹுனைஸ் எம்பியை நோக்கி கைநீட்டியவராக ‘இவரை சு.கட்சியில் இணைத்து  பிரதியமைச்சராக்க வேண்டும’; என்று கூறினார்’;.

 

அதற்கு பதிலளித்த நாமல் , ‘அவ்வாறு பிரதியமைச்சராக ஹூனைஸை நியமிக்க வேண்டும் என்றால் அவர் – அமைச்சர் ரிசாதை விட்டு பிரிந்து வந்து தனியாக செயற்பட்டுக் காட்ட வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராக்கி பிரதியமைச்சர் பதவி வழங்க முடியும்’ என்றார்.

 

இதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களது கருத்தை ஏற்றுக் கொள்வது போல் புன்முறுவல் செய்தார் ஹூனைஸ் எம்பி.

 

ஆனாலும் கடந்த 06 மாதங்களாக அமைச்சர் ரிசாதுடன் முரன்பட்டு  பிரிந்து தனியாகச் செயற்படக் கூடிய எந்த ஒரு சந்தர்ப்பமும் அவருக்கு அமையவில்லை.

 

  இந்தக் கட்டத்தில்தான் முசலி பிரதேசத்தில்; புதிதாக கட்டப்பட்ட பல  கூட்டுறவுச்சங்க  கட்டிடங்களுக்கு தனது பெயரை இடுமாறு பலவந்தமாக அதிகாரிகளை பணித்து அவரது பெயரையும் பொறித்தார்.

 

 இதற்கு முசலி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அழிக்கப்பட்டன.

 

இதனை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட ஹூனைஸ் எம்பி அமைச்சர் ரிசாதுடன் முரன்பட ஆரம்பித்தார்.

 

நாமல் மற்றும் ரங்காவின் அஜந்தாவின் படி ஹூனைஸ் அதனை கச்சிதமாக செய்து முடித்தார்.
இதன் பின்னணியில்தான் கடந்த மாதம் ஹஜ் விளையாட்டு விழாவை ஒழுங்கு செய்து ரங்கா கூறியதன் படி அமைச்சர் ரிசாதை அழைக்காமல் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான நாமல், ரங்கா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியேரை அதிதிகளாக அழைத்திருந்தார்.

 

இப்போது ரங்காவின் நிபந்தனை முழு அளவில் ஹூனைஸ் எம்பியால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அண்மையில்  திகாம்பரம், ராதாகிருஷ்னன் போன்றோர்க்கு பிரதியமைச்சர் பதவி கிடைத்தது. இதன் பின்னணிலும் இந்த ரங்காவே இருந்துள்ளார்.

 

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் தனக்கும் பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஹூனைஸ் எம்பி இறுதியில் ஏமாற்றம் அடைந்ததுடன் எவ்வாறாகவும் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ரங்காவின் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களாக செயற்பட்டுவருகின்றார். இதுதான் ரிசாதுடன் மனக்கசப்பில் இருப்பதற்கான உண்மையான காரணமாகும்.

 

இந்த வேளையில் இன்னுமொரு விடயமும் ஊடுருவிக்கு கிடைத்தது.

 

அதாவது, வன்னி  மாவட்டத்தின் 05 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவராக அமைச்சர் ரிசாதின் சிபாரிசின் கீழ் நியமனம் செய்யப்பட்டிருந்தார் ஹுனைஸ் எம்பி. வருமானம் இன்றி காணப்பட்ட ஹூனைஸ் எம்பி – அபிவிருத்திக் குழு தலைவர் என்ற பதவி மூலம் அடாத்தாக சில வருமானம் வரக்கூடிய வேலைகளையும் செய்;ய ஆரம்பித்தார்.

 

பிரதேச வளங்களில் கைவைக்கும்  இந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்து செல்வதை அவதானித்த தமிழ் மற்றும் முஸ்லிம் உயரதிகாரிகள் – இவரது வருமானம் ஈட்டும் வழிகளுக்கு தடை ஏற்படுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் கொண்ட ஹூனைஸ் எம்பி அந்த அதிகாரிகளை இடமாற்ற திட்டம் தீட்டினார். இதற்குரிய மூலக்காயாக  அதிகாரம் மிக்கவாராக இருந்த ரிசாதை பயன்படுத்த முயற்சித்தார். இதுதான் அந்த விடயம்.;.

 

முரண்பாடுகளை தேடிக்கொண்டிருந்த ஹூனைஸ் எம்பிக்கு இதுவும் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

 

 இந்தப் பின்னணயில் தான் மின்னலானவர் ஹுனைஸ் எம்பியை தனது கைக்குள் போட்டுக் கொண்டதுடன் மட்டுமன்றி ரிசாதுக்கும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்புவதற்கும் திட்டம் வகுத்தார்.

 

இதில் ஒரு கட்டம் தான் கடந்த 19ஆம் திகதி ஹுனைஸ் எம்பியை மின்னலுக்கு அழைத்து ரிசாதுக்கும் ஹூனைஸூக்கும் இடையிலான முரண்பாட்டை பகிரங்கப் படுத்த ஹூனைஸ் எம்பிக்கு களம் ஏற்படுத்திக் கொடுத்து தனது கபடத்தனத்தை அரங்கேற்றினார்.

 

இது போன்று மின்னலானவரின் கபடத்தனத்திற்கு  இன்னுமொரு உதாரணத்தையும் குறிப்பிடலாம்.
அதாவது அளுத்கம சம்பவத்தின் பின்னர் சமுகத்திற்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த முஸ்லிம் தேசியத் தலைமைகளான அமைச்சர் ஹக்கீம் – ரிசாதை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பிழையாக காட்டுவதற்காக அவர் கடமையாற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்திய குள்ளநரித்தனமான சம்பவமாகும்.

 

எவ்வாறெனில் குறித்த மின்னல் நிகழ்சிக்கு ஹக்கீம் ரிசாத் இருவரையும் அழைக்காமல் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி வாயிலாக ஊடக அடக்கு முறையை பயன்படுத்தி – விளம்பரங்கள் இட்டு அவர்கள் இருவரையும் நிகழ்சிக்கு அழைத்துக் கொண்டமையாகும்.

 

இந்நிகழ்சி;க்கு அவர்கள் வராமல் விடவேண்டும், அதன் மூலம் சமுகத் துரோகிகளாக இவர்களை சித்தரிக்க வேண்டும் என்ற உள்நோக்குடனேயே இதனை மின்னலானவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எல்லாமே தலைகீழாக நடந்து முடிந்தது. இதுவும் அவரது அஜந்தாவில் உள்ள ஒரு சம்பவமாகும்.

 

இப்போது அண்மைய நாட்களாக ஹுனைஸ் எம்பியை மின்னலானவரின் இல்லத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது என மின்னலானவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஊடுருவிக்கு தெரிவித்தார்.

 

ஹுனைஸ் எம்பி – மின்னலானவரின் வீட்டில் இருக்கும் விடயத்தை மின்னலானவர் – ஊடகத்துறை சார்ந்தவர்கள், இணையத்தள செய்தியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பை எடுத்து, ‘ அமைச்சர் ரிசாதின் விசுவாசி இப்போது என்கைக்குள்.

 

நான் சொல்வதையே அவர் செய்வார் என்று கூறிவருகின்றாராம்’ இவர் இவ்வாறு அதிகாரமாக பேசுவதற்கு காரணம் பிரதியமைச்சு பதவி என்ற மந்திர வாசகத்திற்கு ஹூனைஸ் எம்பி அடிமையானதாகும்.

 

நாமலுக்கு ஊடாக பிரதியமைச்சர் பதவி ஆசையை ஹுனைஸ் எம்பிக்கு ஊட்டிய இந்த  மின்னலானவரிடம் வேறு வழியில்லாமல் -இறுதி அடைக்கலம் தேடியுள்ளார் ஹூனைஸ் எம்பி.
 முஸ்லிம் சமுகத்தையும் முஸ்லிம் தலைமையையும் காட்டிக் கொடுப்பதற்கான பரிசாகத்தான் ஹூனைஸ் எம்பிக்கு; இப்பதவியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார் மின்னலானவர்.

 

இந்த நிலையில் பிரதியமைச்சர் பதவி நழுவி விடக்கூடாது என்பதற்காவும் அவசரமாக பெற்றுக்கொள்வதற்குவும் முசலி என்ற பிரதேசவாத கோசத்தை தனக்கு நெருக்கமானவர்கள் ஊடாக மிகவும் அதிகமாக வெளிப்படுத்தி வருகின்றார் ஹூனைஸ் எம்பி.

 

விரைவில் பகிரங்க கூட்டம் ஒன்றையும் கூட்டி அமைச்சர் ரிசாதுக்கு எதிராக கருத்துக்களை கூறி நாமலிடம் தனது விசுவாசத்தையும் காட்டவுள்ளார்.

 

2000ம் ஆண்டு தாஜ் முகம்மதுக்கும், 2001ம் ஆண்டு புர்ஹானுதீன் பொறியிலாளருக்கும்; 2010ம் ஆண்டு அனிஸ் கரீமுக்கும் முசலி பிரதேசம் முழுமையாக ஆதரவு வழங்கிய போதும் இவர்கள் மூவராலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team