கெஸ்பேவயில் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த காசாளர் உயிர் இழப்பு! - Sri Lanka Muslim

கெஸ்பேவயில் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த காசாளர் உயிர் இழப்பு!

Contributors

கெஸ்பேவயில் உள்ள மூன்று மாடி ஹோட்டல் ஒன்றின் உச்சியில் இருந்து தவறி விழுந்து ஹோட்டலின் காசாளர் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

தெனிப்பிட்டிய வரகாபிட்டிய பிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ரித்மா தரங்க என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 11 மணியளவில் ஹோட்டல் மூடப்பட்டதாகவும், அதிகாலை 2 மணியளவில் ஹோட்டலுக்கு முன் காசாளர் இரத்தம் தோய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பணியாளர் ஒருவர் பார்த்த நிலையில், ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, சில நிமிடங்களில் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அரை மணித்தியாலத்தின் பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்றிரவு வெகுநேரம் தொலைபேசியில்

உரையாடிக்கொண்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team