
அமைச்சர் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் மனைவி முறைப்பாடு!
Read Time:2 Minute, 2 Second
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவியான ஆஷா விஜயந்தி பெரேரா பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடிதம் மூலம் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் அளுத்கமகேயினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமைச்சரே அதற்கு காரணம் என தெரிவித்துள்ள விஜயந்தி பெரேரா, தனது உயிருக்கு பாதுகாப்பை பெற்றுத் தருமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆஷா விஜயந்தி, அமைச்சர் அளுத்கமகேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சரின் சொத்து விபரங்களை மனைவியே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கொடுத்துள்ளதாக கூறி அமைச்சர் மனைவிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் விசாரணை ஆணைக்குழுவிடம் தான் அமைச்சரின் சொத்து விபரங்களை வழங்கவில்லை என தெரிவித்துள்ள விஜயந்தி தனது பாதுகாப்பு கருதி முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார் என வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது (j.nw)