அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் முன்னாள் மக்கள் தொடர்பாடல் அதிகாரி அமானுல்லாஹ் அதிபர் வபாத்

Read Time:1 Minute, 34 Second

நன்றி – Anees Shariff


மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைனாள் அதிபரும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக)மிக நீண்ட காலம் பணியாற்றியவரும் எங்கள் எல்லோரினதும் அன்பிற்கும் பாத்திரமான அமானுல்லாஹ் சேர் இன்று அதிகாலை கொழும்பில் காலமானார். (இன்னாலில்லாஹி வொயின்னா இலைஹி ராஜிஊன்)

 எப்போதும் இன்முகத்துடன் எல்லோரையும் வரவேற்று உபசரித்து தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்த இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரின் கரகரத்த சிரிப்பொலி எப்போதுமே எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அவரை இழந்து அவரின் பிரிவுத் துயரினால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஊரவர்கள் என்ற எல்லோருடைய துயரங்களிலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தினை வளங்குவானாக. ஆமீன்.

Previous post வேரோடு சாய்ந்த வேப்பை மரத்திலிருந்து தப்பித்துக்கொண்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய சிறார்கள்
Next post சவுதி அரேபியாவுடன் ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை