“அரசாங்கம் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலை சந்திக்க நேரிடும்” – ஜி.எல்.பீரிஸ்!

Read Time:2 Minute, 11 Second

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் முடிவுகளின்படி அரசாங்கம் சுமார் 10 வீத வாக்கு வீதத்தையும், இறுதித் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளும் சுமார் 8 வீதமான சிறிய வாக்கு வீதத்தைப் பெறும் எனவும் பேராசிரியர் எல். பீரிஸ் இன்று (6) தெரிவித்தார்.

அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டிய உயர் நீதிமன்றத்துக்கு நன்றி செலுத்த விரும்புவதாக கூறிய ஜி. எல். அரசாங்கம் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலை சந்திக்க நேரிடும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம் தேர்தலுக்கு உள்ள அனைத்து தடைகளையும் நீக்கியமை தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த பலமான ஆதரவு என்றும், வேட்பு மனு தாக்கல் செய்த 3500 அரச பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரபட்சத்தில் தேர்தல் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக நிதி அமைச்சின் செயலாளருக்கு சுதந்திரமாக செயற்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்ப்பது பாரிய தவறு எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் முன்னணியின்  அலுவலகத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

Previous post ரமழான் காலத்தில் விசேட விடுமுறை – உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
Next post கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – சாணக்கியன் எச்சரிக்கை!