அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் நெருக்கடி!

Read Time:52 Second

அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு மூலப்பொருட்களை விநியோகிக்கும் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இயந்திரங்கள், வாகன உதிரி பாகங்கள், காரியாலய உபகரணங்கள் உட்பட பல பொருட்களை விநியோகிப்பவர்களுக்கே இவ்வாறு பணம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிலுவைத் தொகைகளை இந்த வருடம் வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.

Previous post இஸ்ரேல் அரசுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம்!
Next post “தேர்தலை கண்டு எமக்கு அச்சமில்லை” – மஹிந்த!