ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி தலைவர் எடுத்த அதிரடி முடிவு!

Read Time:57 Second

2022 – T20 உலகக் கிண்ண தொடரில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி போராடி நான்கு ஓட்டங்களால் தோற்றது.

இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி பதவியில் இருந்து விலகுவதாக தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், அணியில் சாதாரண வீரராக தொடர்ந்தும் பங்குபெற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான தயார்ப்படுத்தல் மற்றும் அணித் தேர்வாளர்கள், முகாமைத்துவம் மீதும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous post ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு; இழப்பீடு கோரும் ரிஷாட்!
Next post பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் ரக்பி போட்டி!