இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரியாஸ் மவ்லவி வபாத்தானார்.

Read Time:1 Minute, 42 Second

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மவ்லவி ரியாஸ் அவர்கள் இன்று வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த நான்கு சிறு பிள்ளைகளின் தந்தையான
(திருமணத்தின் பின்னர் கண்டி பிரதேசத்தில் வாசித்து வந்தவர்) இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருந்த நிலையில் இவரின் சத்திர சிகிச்சைக்காக பெருந்தொகை பணம் தேவைப்படுகிரது என நாம் அறிவித்து சிலர் உதவிகளும் செய்து இருந்த வேளை இன்று கண்டி வைத்தியசாலையில் வைத்து வபாத்தாகி உள்ளார்.

அன்னாரது ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகை தொடர்ந்து 97ம் கட்ட சிராஜ் நகர் ஜும்அ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்லிவாயல் னமய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக.. அவரின் பிரிவால் வாடும் பிள்ளைகள் , மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் அதனை தாங்கும் சக்தியை வழங்குவானாக.

(ஜுனைட்.எம்.பஹ்த்)

Previous post காத்தான்குடி நகரசபைக்கு எதிரான கணவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Next post அமெரிக்காவில் 1.9 லட்சம் தமிழ் பேசுவோர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தகவல்