வடமாகாண சபையின் அமைச்சர்கள் விபரம் வெளியீடு

Read Time:1 Minute, 20 Second

TNA-logo

(எஸ்.கே.பிரசாத்)

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த மேற்படி அமைச்சரவைத் தெரிவு, தற்போது இறுதியான தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கல்வி அமைச்சராக தம்பிராஜா குருகுலராஜா, சுகாதார அமைச்சராக பத்மநாதன் சத்தியலிங்கம், விவசாய அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், உள்ளூராட்சி அமைச்சராக பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவைத் தலைவராக கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவராக அன்ரனி ஜெகநாதன் ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Previous post குளோரின் குழாய் வெடிப்பு: 200 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Next post லிபிய பிரதமர் கடத்தப்பட்டுள்ளார்