உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கு திகதி குறிப்பு!

Read Time:1 Minute, 9 Second
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Previous post கம்பஹாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி உண்ணாவிரத போராட்டம்!
Next post மாளிகைக்காடு மையவாடி விவகாரம்; நடவடிக்கை எடுக்குமாறு ரணில் பணிப்பு!