ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விலைகள் குறையும் –  காஞ்சன!

Read Time:1 Minute, 5 Second
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணத்தை மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விலைச் சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன குறிப்பிட்டார்.

Previous post நிந்தவூரை சேர்ந்த முஹம்மத் அரபாத் கட்டாரில் வபாத்!
Next post மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட கபூரியா அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர் – கல்லூரியின் சார்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜர் – உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவு!