ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் – கலகத்தடுப்பு பொலிஸாரும் குவிப்பு!

Read Time:1 Minute, 35 Second

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோசங்களை எழுப்பியவாறு வீதியோத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கத்தினர், சட்ட வல்லுனர்கள் மற்றும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் நபரொருவர் உயிரிழந்தமை மற்றும் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நபரொருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Previous post இலங்கையின் முக்கிய அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டதா?
Next post உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு!