கமுர்தீன் சில்முன் நிஸா திடீர் மரணம் : வைரஸ் தொற்று என சந்தேகம்

Read Time:2 Minute, 16 Second

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியியைச்சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தாயார் இடுப்பு வலி காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் நேற்றிரவு (30) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஜந்து பிள்ளைகளின் தாயாரான கிண்ணியா.மஹமார் கிராமத்தைச்சேர்ந்த கமுர்தீன் சில்முன்நிஸா (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இடுப்பு வலி காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்றுமுன் தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12-30மணியளவில் அனுமதிக்கப்ட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மாலை 6.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலமாக கொண்டுவந்த போது வரும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் உறவினர்கள் திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமியிடம் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லையென தெரிவித்திருந்த போதிலும் மரணத்தை சட்ட வைத்திய நிபுணர் ஜே்.சீ.சமரவீர பார்வையிட்டதுடன் வைரஸ் தொற்றாக இருக்கலாம் எனவும் மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்களை கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை சட்ட வைத்திய பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்

Previous post NFGG நடாத்திய தொழிலாளர்கள் உபசரிக்கும் நிகழ்வு
Next post முத்தலாக்கை நாடு முழுவதும் சட்டமாக்க வேண்டும்: ஹிந்துக்கள் கோரிக்கையால் மோடி அரசுக்கு அதிர்ச்சி