கல்முனை ‘எபிக்’ கல்வியகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ‘O/L’ தின நிகழ்வும்

Read Time:1 Minute, 48 Second

-எஸ்.அஷ்ரப்கான்-

கல்முனை ‘எபிக்’ கல்வியகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஓ-எல் தின
நிகழ்வும் (22.01.2014) கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில்  நேற்று
‘எபிக்’ அமைப்பின் உபதலைவர் ஏ.ஜி.எம்.தாசிம் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக
முகாமைதுவ பீட விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் அவர்களும், கௌரவ அதிதியாக
கல்முனை அல் – பஹ்ரிய்யா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ. அப்துர்
ரஸ்ஸாக் அவர்களும்,

விசேட அதிதிகளாக எம்.ஐ.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம்.
றிசாட் ஸரிப், எம்.வை. அப்துர் ரஸ்ஸாக், எம்.எச்.ஏ. றஹீம் ஆகியோரும்
மற்றும் அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான எம்.எம். சிறாஜி அவர்களும்
அமைப்பின் அங்கத்தவர்களும், ஊர் பிரமுகர்களும், கல்விமான்களும்
ஆசிரியைகளும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஓ.எல். பரீட்சையில் அதிகூடிய சித்திபெற்ற மாணவர்களுக்கு
பரிசில்களும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வை
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் காசாளரும் அறிவிப்பாளருமான
எம்.பி.எம். றின்ஷான் தொகுத்து வழங்கினார்.

 

akhan1 akhan2 akhan3

Previous post டுபாய் விமான நிலையத்தில் திருடி வசமாக மாட்டிக்கொண்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ படபிடிப்பாளர் – சண்டே டைம்ஸ்
Next post ஹரிஸ் எம்பி யினால் சம்மாந்துறையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு