
கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் படலம் ஆரம்பம்
சிறாஸ் மீராசாஹிபா அல்லது சட்டத்தரணி நிசாம் காரியப்பரா எஞ்சி இருக்கும் காலப்பகுதிக்கு மேயர் பதவி வகுப்பது தொடர்பில் இருவருக்கும் இடையில் அதிகாரப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் சிறாஸ் மீராசாஹிபை பதவியை விட்டு விலக உத்தரவு வழங்கியும் கூட இவர் கட்சியின் முடிவை மதிக்காமல் செயற்படுகின்றார் என்று கல்முனை மக்களும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சாதாரண மக்களுடன் நெருக்கமாக பழக முடியாதவர் என்று சாய்ந்தமருது மக்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனால் கட்சியின் முடிவுக்கு மாறாக கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் இருக்க முற்பட்டால் அவரை வரவு செலவு திட்ட விவாதத்தின் மூலம் தோற்கடிப்போம் என்று ஒரு சிலரும் வரவு செலவுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றி கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் என்பதை நிரூபிப்போம் என்று ஒரு சாராரும் ஈடுபடும் இவ்வேளையில் மாநகர சபை உறுப்பினர்களை தமக்கு சாதகமாக வாக்களிக்க விலை கொடுத்து வாங்கும் படலம் கல்முனையில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது