
களுத்துறை முஸ்லிம் லீக் சம்மேளன ஏற்பாட்டில் தலைமைத்துவ, திறன் விருத்தி செயலமர்வு!
Read Time:1 Minute, 46 Second
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு (17) கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவு,ம் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் ஊக்குவிப்பு மனித வள மேம்பாட்டு பேச்சாளர் அஷ்ஷெய்க் யாஸிர் லாஹிர் நளீமி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் கலாநிதி எம் டி எம் மஹீஸ் மற்றும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜிவதீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதோடு,களுத்தறை மாவட்ட சமூகப் பிரச்சினைகளை அடையளம் கண்டு ஆறு மாதங்களுக்குட்பட்ட நான்கு சமூக குழு ஆய்வு செயற்திட்டமும் (Community Need Assessment) இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
களுத்துறை மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்கற்கைகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.