காத்தான்குடியில் இரவு நேர காவலாளி ஒருவர் ஜனாஸாவாக மீட்ப்பு…

Read Time:1 Minute, 3 Second

 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி கர்பலா வீதி மத்திய மகா வித்தியாலயத்திற்கு. அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக கடமைபுரிந்த ஒருவர் 23.03.2016 இன்று காலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

ஜனாஸாவாக மீட்கப்பட்ட நபர் காத்தான்குடி 5 சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க அப்துல் சலாம் என இனங்காணப்பட்டுள்ளது..

குறித்த ஜனாஸா மேலதிக பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous post தலைமைத்துவ பலவீனம்: பலப்படுத்திய தேசிய மாநாடும்?
Next post திருகோணமலை குச்சவெளியிலுள்ள மூன்று பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து பகிஸ்கரிப்பு.