கிண்ணியாவில் டெங்கினால் இன்னுமொரு சகோதரர் மரணம்

Read Time:1 Minute, 48 Second

எப்.முபாரக் , அப்துல்சலாம் யாசீம்


கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த 13ம் திகதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (18) காலை உயிரிழந்துள்ளாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-குறிஞ்சாங்கேணி பகுதியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அபூ ஹனீபா நயீம் (44வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது காய்ச்சல் காரணமாக கடந்த 13ம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் டெங்கு என இணங்கானப்பட்டமையினால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியமையினால் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிலளின் சடலம் மாத்தளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous post மறிச்சிக்கட்டி விவகாரம்: இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
Next post பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்கு புதிய மாணவர் அனுமதி