குளோரின் குழாய் வெடிப்பு: 200 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Read Time:1 Minute, 10 Second

images (2)

குளோரின் குழாய் வெடித்ததில் 200 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியிலுள்ள பெந்திரிக்வத்தை எனுமிடத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள குளோரின் குழாயே இன்று புதன்கிழமை இரவு வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30 க்கும் அதிகமானோர் மூச்செடுப்பதற்கு அவதிப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்கள் 300 க்கும் அதிகமானோர் வைத்தியசாலைக்கு வெளியே இருப்பதாகவும் வைத்தியசாலையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

Previous post கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி!
Next post வடமாகாண சபையின் அமைச்சர்கள் விபரம் வெளியீடு