சச்சினின் ஓய்வு மிக அருகில்: சௌரவ் கங்குலி

Read Time:1 Minute, 51 Second

SachinGanguly

உலக சாதனையாளரான சச்சின் டெண்டுல்கரின் ஓய்விற்கு நீண்ட காலங்கள் இல்லையென இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அத்தோடு, சிறப்பான இனிங்ஸொன்றை ஆடிய பின்னரே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமெனவும் சௌரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டுவென்டி டுவென்டி போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் தற்போது பங்குபற்றி வருகிறார்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் ஓய்விற்கான நாட்கள் அதிகமாக இல்லை என சௌரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு குறித்து அதிக ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர், அவை சச்சின் டெண்டுல்கர் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு மிகவும் அதிக தூரத்தில் இல்லையென தான் கருதுவதாகவும், ஆனால் அவர் ஓய்வுபெறும் போது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் இனிங்ஸை ஆடிய பின்னரே ஓய்வு பெற வேண்டுமென கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
Previous post இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பிப்பு
Next post விக்னேஸ்வரனும், சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் வீழ்ந்து விட்டனரா..?