சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் மாத்திரம் பரீட்சை – பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு!

Read Time:1 Minute, 4 Second

அனைத்து சட்டக் கல்லூரி பரீட்சைகளையும் ஆங்கிலத்தில் மாத்திரம் நடாத்துவது தொடர்பான வர்த்தமானி தொடர்பில் இன்றைய தினம் (21) பாராளுமன்றத்தில்  வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.

சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு பல தரப்பினர் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி உரிய பரீட்சைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே நடத்தப்பட வேண்டும் என ஒரு வாக்கும், வர்த்தமானிக்கு எதிராக 113 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

Previous post உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? – இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!
Next post அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வழங்கும் இலவச கருத்தரங்கு!