‘சிங்கத்தின் நான்காவது பாய்ச்சல்’ நூல் வெளியீடு

Read Time:2 Minute, 37 Second

-அஸ்ரப் ஏ சமத்-
சிங்கத்தின் நான்காவது பாய்ச்சல்’ சிங்கயாகே சிவ்வனி பிம்மா என்ற தலைப்பில் சிங்களமொழி முலம் தற்கால முஸ்லீம் சமுகத்தினைப் பற்றி பௌத்த சமுகம் அறிந்திருக்க வேண்டியதும், இன ஜக்கியம் பற்றிய நூல் நேற்று இரவு (22) 7.00 மணிக்கு கொழும்பு தபால் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் வெளியீடப்பட்டது.

 
இந் நூலை ஜாமிய நளீமியா கலாபீட பி.ஏ பட்டதாரியும் தற்பொழுது அமால் சர்வசேத பாடாசலையின் ஆசிரியர் அஸ்சேக் ஏ.டப்ளியு.எம். றிஸ்மி (பீ.ஏ) சிங்களமொழி முலம் இந் நூலை எழுதியிருந்தார்.
இந் நூல்பற்றி என். ஏம். அமீன், ஜனாப் தஹ்லான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

 
இந் நூலில் கடந்த 30 வருட கால யுத்தத்pன்போது 27ஆயிரம் போ இறந்தனர். ஆனால் போதைப்பொருள், 44ஆயிரம்பேர் வருடாந்தம் இறக்கின்றனர் 17ஆயிரம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கலாச்சார சீரவில்யிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாப்பது இஸ்லாமிய கலை கலாச்சாரம் உடை, உணவு ஆகிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. கட்டாயம் இந் நூல் ஒவ்வொரு பௌத்தரும் வாசிக்க வேண்டும்.

 
என்.எம் அமீன் இங்கு உரையாற்றுகையில் இன்று இலங்கையில் தமிழ் சிங்கள மக்களுக்கென- 17 தொலைக்காட்சி ஊடகங்கள் 45 வானொழி நிலையங்கள், 22 தமிழ் சிங்கள ஆங்கில பத்திரிகைகள் உள்ளன. ஆனால் முஸ்லீம்களது பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு அல்லது ஆங்கிலத்தில் சர்வதேச சமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமுகத்திற்கென ஒர் ஊடகம் இல்லையே ?
இந்த தருனத்தில் எமது பிரச்சினைகளை நாம் எவ்வாறு சர்வதேசத்திற்கு அல்லது இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்குச் கொண்டு செல்வது என கேள்வி எழுப்பினார் ?

 

as4 as5 as6 as7 as8 as9 as10

Previous post இறை மதமும் இழிவாகும் தேசமும் …!!
Next post கல்முனைக்குடியில் மா.ச உறுப்பினர் ஆரிப் சம்சுதீனால் இலவச நீர் வழங்கிவைப்பு