சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம் நிலாம் அவர்களின் இளைய புதல்வர் வபாத்

Read Time:1 Minute, 21 Second

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37) இன்று மாலை காலமானார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். இருதய நோயினால் கொழும்பு பெரிய வைத்தியசாலை இருதய சிகிச்சைப்பிரிவில் திங்களன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 10.30 மணிக்கு மினுவாங்கொடை கல்லொழுவை முனாஸ்வத்தையிலுள்ள 262/13ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கல்வொழுவை ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கஞ் செய்யப்படும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

Previous post அக்கரைப்பற்று கடற்கரையில் முழு நிலவில் கலை இரவு: M.I.M. முஹியத்தீனுக்கு நாளை கௌரவிப்பு
Next post இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?