ஜனாதிபதி நேற்று மாலை நாடு திரும்பினார்!

Read Time:58 Second

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று மாலை நாடு திரும்பினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில்நேற்று  நடைபெற்ற செய்யத் எதிர்கால வலு சக்தி விருது வழங்கும் (Zayed future Energy Prize Awards Ceremony) விழாவில் கலந்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதி அபுதாபி சென்றிருந்தார்.

ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி ஒலாபுர் ரக்நர் கிறிம்சனையும் அபூதாபி நகரிலுள்ள எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலில்  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

Previous post ரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம்
Next post சிரி­யாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை