
டுபாய் விமான நிலையத்தில் திருடி வசமாக மாட்டிக்கொண்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ படபிடிப்பாளர் – சண்டே டைம்ஸ்
இலங்கை அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இந்த தகவலை சன்டே டைம்ஸ் வாரஇதழ் வெளியிட்டுள்ளது.http://www.sundaytimes.lk/131222/columns/presidential-cameraman-snapped-stealing-camera-at-dubai-airport-77501.html அண்மையில், தென்னாபிரிக்கா, மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு சிறிலங்கா அதிபர் கொழும்பு திரும்பிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டுபாய் விமான நிலையத்தில், இலங்கை அதிபர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், 2325 டொலர் (3 இலட்சம் ரூபா) பெறுமதியான, கண்காணிப்பு காணொளிப்பதிவு கருவியை சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றில் இருந்து திருடினார். அவர் அதனை தனது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக வெளியே செல்லமுயன்ற போது,
அதனை கண்காணிப்பு காணொளிக் கருவி ஊடாக அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சிறிலங்கா அதிபரின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்று விபரம் தெரிய வந்ததை அடுத்தே, குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளரை டுபாய் அதிகாரிகள் விடுவித்தனர். நாம் இலங்கை அதிபருக்கு உயர்ந்த மதிப்பளிப்பதால் தான், விடுவிக்கிறோம் என்றும், இல்லாவிட்டால் சிறையில் அடைத்திருப்போம் என்றும் டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்துள்ளனர்.
கொழும்பு திரும்பியதும் குறிப்பிட்ட ஒளிப்படப்பிடிப்பாளர் தமது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பெலாரஸ் சென்றிருந்த போது, அவருடன் சென்றிருந்த இலங்கை ஊடகப் பணிப்பாளர் ஒருவர், அங்குள்ள விடுதியில் இருந்து போர்வை ஒன்றைத் திருடிக் கொண்டு வந்து விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது,
Presidential cameraman snapped stealing camera at Dubai airport
It is the high respect in which President Mahinda Rajapaksa is held in Dubai that saved the day. A photographer of his media team, returning in the official entourage from visits to South Africa and Kenya, was caught red handed allegedly stealing a CCTV (video) camera worth more than Rs 300,000 (or around US$ 2325) from a duty free shop at the Dubai International Airport. He is said to have tried to conceal it in his bag and was detected walking out.
The act was seen by shop staff and recorded by surveillance cameras at the airport. Dubai is one of the well-known destinations for duty-free shopping. Authorities who arrested the photographer had learnt later that he was part of President Rajapaksa’s entourage returning from a State visit to Kenya where the President attended that country’s 50th year of independence. This was after he attended South African icon Nelson Mandela’s funeral. “We have the highest respect for President Rajapaksa. We are, therefore, releasing you. Otherwise, you would have ended up in jail,” one airport security official told the photographer.
After returning to Colombo, the photographer was relieved of his duties. It may be recalled that after President Rajapaksa visited Belarus in August this year, there was a complaint to the External Affairs Ministry in Colombo through diplomatic channels. A hotel where the entourage stayed in Minsk, the Belarus capital, had complained that a local media director had taken back with him, reportedly to Colombo, a bed cover from his room.