தம்பலகாமம்: முகம்மது மலீக் விபத்தில் வபாத்

Read Time:1 Minute, 28 Second

தம்பலகாமம் -கிண்ணியா பிரதான வீதி கோயிலடி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்றிரவு (03) 07 மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம், இலக்கம் 54 ஏ சிறாஜ்நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹமீது முகம்மது மலீக் (18வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் கிண்ணியா பிரதேசத்திலிருந்து EP BEZ 4209 எனும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில் மணல் ஏற்றச்சென்ற WP LC-4456 எனும் இலக்க டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதினாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சடலம் கன்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous post மாவனல்லயில் முஸ்லிம் வர்த்தகரின் கடையில் தீ: அச்சப்படத் தேவையில்லை.
Next post கொழும்பு மாவட்ட வர்த்தக சங்கம் நிவாரண உதவி