தம்புள்ளை பள்ளி குறித்து வெளிநாட்டு தலைவர்களிடம் கலந்துரையாட கோரிக்கை!

Read Time:3 Minute, 26 Second

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான சவால்கள் குறித்து கலந்துரையாடுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவரும் தம்புள்ள கைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினருமான எஸ்.வை.எம். சலீம்தீன் முன் வைத்துள்ளார். இக்கோரிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பெளஸி ஆகியோரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தம்புள்ளை ஹரியா பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகியது. தற்போது வீதி அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி என்ற போர்வையில் பள்ளிவாசலின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி பள்ளிவாசல் அப்புறப்படுத்தப்படமாட்டாது, பாதுகாக்கப்படும் என உறுதி வழங்கியிருந்தாலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பள்ளிவாசாலை அகற்றுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள். இனாமலுவே தேரரும் முன்னின்று செயற்படுகிறார்.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரவுள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடம் நிலைமையை விளக்கி அவர்கள் மூலம் ஜனாதிபதிக்கு பள்ளிவாசலுக்கு உத்தரவாதமளிக்க அழுத்தங்களைப் பிரயோகிக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முன்னெடுப்பின் மூலமே தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் பங்களாதேஷ், புரூணை, பாகிஸ்தான், நைஜீரியா, காம்பியா, சியேரா லியோன், மலேசியா, மாலைதீவுகள் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-vidi

Previous post எகிப்து: 2014 ஆரம்பத்தில் பொதுத் தேர்தல்!
Next post சவுதி அரேபியாவின் கொபார் பிரதேசத்தில் இலங்கை தூதரக பாடசாலையை நிறுவ முயற்ச்சி!