
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரியாவிடை நிகழ்வு
-எம்.வை.அமீர்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று (2014.01.23) பிரியாவிடை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
கடந்த 2008ம் ஆண்டு ஒரு பட்டதாரி மாணவனாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இணைந்து கல்வி கற்று பின்னர் இதே பீடத்தில் 2013.06.03ம் திகதிமுதல் செய்முறையாளராக பணிபுரிந்து இன்றுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தை விட்டுச்செல்லும் ஏ.ஜீ.பஸ்மில் என்ற சக ஊழியருக்கான பிரியாவிடை நிகழ்வில் ஏனைய அவருடன் பணிபுரிந்த செய்முறையாளர்களும் அவர் பணியாற்றிய பௌதிக விஞ்ஞான பிரிவில் பணியாற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பௌதிக விஞ்ஞான பிரிவின் ஊழியர்கள் சார்பில் திருமதி பர்சானா முஸ்தபா பிரியாவிடை பெற்றுச்செல்லும் ஏ.ஜீ.பஸ்மில் இங்கு படிக்கும் போதும் சரி பணிபுரியும் போதும் சரி மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் இவரைப்போன்றவர்களை பிரிவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ஏ.ஜீ.பஸ்மில் தான் படிக்கும் போதும் பணிபுரியும் போதும் தனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வேளையில் தன்னால் எதாவதே தீங்கு இளைக்கப்பட்டிருந்தால் மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.