தேசபந்து தென்னகோனுக்கு எதிரான முறைப்பாடு குறித்து நீதிமன்றின் உத்தரவு!

Read Time:1 Minute, 8 Second

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சமர்ப்பித்த ரிட் மனு இன்று (20) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Previous post ‘மக்களின் ஆதரவு எமக்கே’ – அநுரகுமார!
Next post ‘டொலரை விட ரூபாய் வலுப்பெற்றால் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்’ – சுனில் ஹந்துன்நெத்தி!