தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

Read Time:1 Minute, 6 Second

கடந்த 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறுகோரி, உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர், பொலிஸ்மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் உட்பட அமைச்சரவையின் 35 உறுப்பினர்களும், இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Previous post நாளை நடைபெறும் பணிப்புறக்கணிபில் தனியார்பஸ்கள் பங்கேற்காது!
Next post சாளம்பைக்குளம் அக்-அக்ஸா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!