நாடாளுமன்றத்திலும் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைக்குமாறு சஜித் கோரிக்கை

Read Time:1 Minute, 40 Second
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நோக்கில் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நாடு முழுவதும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நிலையங்களை ஏற்படுத்தும் யோசனையை அமைச்சரவையில் அண்மையில் தாக்கல் செய்துள்ளனர்.

இதன் மூலம் போதைப் பொருள் சம்பந்தமான நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிலைமையை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தயவு செய்து நாடாளுமன்றத்திலும் அப்படியான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை ஏற்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Previous post கொமன்வெல்த் மாநாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் எங்கே? ஜே.வி.பி
Next post பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வீட்டில் பணம் கொள்ளை