நாணாட்டன் பொன்தீவுகண்டல் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளனர். அமைச்சர் றிசாட் பதியுதீன்

Read Time:7 Minute, 37 Second

(இர்ஷாத் றஹ்மததுல்லா)

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்லிம்களுக்கென மு்னெடுக்கப்பட்டுவந்த இந்திய வீடமைப்பு திட்டம் பிரதேச செயலாளரினால் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது தொடர்பில் ஆராயும் வகையில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று மாலை(2013.11.04) அங்கு சென்றனர்.

பூவரசன்குளம் கிராமம்,மற்றும் பொன்தீவு கண்டல் கிராமங்களில் முஸ்லிம் தமிழி மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவருகின்றனர்.இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் அப்போது இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.பின்னர் சமாதானம் ஏற்பட்டதனையடுத்து இக்கிராமத்துக்கு வந்த போது,இம்மக்கள் தமது இல்லறங்களை அமைத்துக் கொள்ள காணி தேவைப்பாடு காணப்பட்டது.2010 ஆம் ஆண்டு பிரதேச செயலாளர் சந்திர அய்யா,இந்தக் காணியினை உரிய சட்ட திட்டத்திற்கமைய முஸ்லிம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார்.

அதனையடுத்து காணிகள் அம்மக்களால் துப்பரவு செய்யப்பட்டு இந்திய வீடமைப்பு திட்டத்திற்குள் தமிழர்களும்,முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டனர்.அந்த வகையில் 115 முஸ்லிம்கள் தமது பதிவுகளை செய்திருந்த நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தில் 44 குடுமபங்கள் மட்டும் உள்வாங்கப்பட்டது.அதே வேளை 88 தமிழ் குடும்பங்கள் தமது பதிவினை இப்பிரதேசத்தில் கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு 36 வீடுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கடந்த 3 மாத காலமாக முஸ்லிம் மக்கள் தமது நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிற பிரதேசங்களில் இருந்து அரசியல் மற்றும் மதவாதிகளினால் அழைத்து வரப்பட்ட குழுவினர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி பிரதேச செயலாளரை தமது பணிகளைசெய்யவிடாது தடுத்தும் உள்ளனர்.

இந்த நிலையினையடுத்து பிரதேசத்தில் காணப்பட்ட பதற்ற நிலையினையடுத்து அங்கு விஜயம் செய்த வடமாகண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் நானாட்டான் பிரதேச செபை உறுப்பினர்சஹாப்தீன் ஆகியோர் அப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினர்.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று பிரதேச செயலாளர் சந்திர அய்யா,பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் உள்ளிட்ட அதிகாரிகள் சகிதம் சென்று நிலையிமையினை பார்வையிட்டுள்ளார்.அதே வேளை முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்ட காணிகளுக்கு முன்புறமாக அமைந்துள்ள அரச காணிகளை தமிழ் மக்கள் துப்பரவு செய்துள்ளதையும் அமைச்சர் அவதானித்தார்.

பிரதேச சயெலாளர் என்ற வகையில் தான் எந்த சமூகத்திற்கும் எதிராக செயற்படவில்லை என்பதையும்,உண்மையாகவே காணி தேவைப்படுபவர்கள் யா் என்பதை அடையாளப்படுத்தி உரிய முறையில் நேர்மையாக அதனை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் இடத்தில் சந்திர அய்யா கூறியுள்ளார்.முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் பரம்பறைகளாக வாழ்ந்துவந்துள்ளதாகவும்,அவர்கள் வெளி மாவட்ட மக்கள் இல்லை என்து தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய அவர்களுக்கு தாம் எழுத்து மூலமாக தற்போதைய பிரச்சினை தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கட்டிடத்தில் தமது தலைமையில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும்,இதன் போது என்னால் கடந்த 3 வருட காலமாக இக்காணி தொடர்பில் எடுக்கப்பட்ட விளக்கத்தையளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கையில் – கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பொன்தீவு கண்டல் பிரச்சினை பெரிதாக தெரிவிக்கப்பட்டுவந்தது.மாவட்ட மற்றும் நானாட்டான் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் நிலைமையினை கண்டறிய இங்கு நான் வருகைத் தந்தேன்.இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை பிரதேச செயலாளர் அவர்கள் காண்பித்தார்கள்.அதே போல் முஸ்லிம்களுக்குரிய மையவாடி கூட காணப்படுகின்றது.

அப்படியெனில் இங்கு முஸ்லிம்கள் வாழக் கூடாது என்று எங்கிருந்தோ சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அறிகின்றேன்.இந்த நிலையில் பிரதேச செயலாளர் அவர்கள் அரசாங்க அதிபர் ஊடாக மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இது தொடர்பில் முழு அறிக்கையொன்றினை இரு தினங்களுக்குள் சமர்பிக்குமாறு கேட்டுள்ளேன். மன்னார் மாவட்டத்தினை பொருத்த மட்டில் மக்கள் மிகவும் நெருக்கமாகஇனம்,மதம் கடந்த வாழ்கின்றனர்.தமது சில தேவைகளுக்காக சிலர் இவ்வாறன முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் இப்பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்கும்,முஸ்லிம்களுக்குமிடையில் எவ்வித பிரச்சினைகளும்இல்லையென்றும் கூறினார்.

5s2

 

5s1

 

5s3

Previous post சவுதி: ஜெட்டாவில் ஆயிரக் கணக்கில் பிடிபட்ட தொழிலாளர்கள்
Next post பஸ் விபத்தில் 11 பேர் பலி; 26 பேர் படுகாயம்