பாதுகாப்பு செயலாளரின் கிழக்கு விஜயம்!

Read Time:1 Minute, 38 Second

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பினை கிழக்கு மாகாண கட்டளை தளபதி லால் செனவிரட்ன மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேய விக்ரம, அமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எ.ம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் செனவிரட்ன, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

east-2
east-3
Previous post இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து மிருகங்கள்
Next post லசித் மாலிங்கவிற்குத் தேவை பணமா? நாடா?