பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்?

Read Time:1 Minute, 42 Second

பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் இந்த ஆண்டில் இலங்கைக்க விஜயம் செய்ய மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் பாப்பாண்டவர் பிரான்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பு தொடர்பில் 2015ம் ஆண்டில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பாப்பாண்டவர் விஜயம் செய்வார் எனவும், எனினும் இந்த ஆண்டில் விஜயம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் வத்திக்கான் பேச்சாளர் வணக்கத்திற்குரிய பெட்ரிக்கோ லம்பார்டி தெரிவித்துள்ளார்.

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாப்பாண்டவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 
எழுத்து மூலமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் பாப்பாண்டவரைச் சந்தித்து ஜனாதிபதியின் அழைப்பு குறித்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous post காசா பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி
Next post இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் –