பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

Read Time:1 Minute, 39 Second

பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது . அக் கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இக்  கோரிக்கை விடுத்துள்ளார்.

261 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் அடங்கியிருந்த கொள்கலனை விடுவிக்குமாறு கோரிய அதிகாரியின் பெயரை, பிரதமர் உடனடியாக வெளியிடத் தவறினால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும்.

கொள்கலனை விடுவிப்பதில் தொடர்புடைய அதிகாரிகளின் விபரங்களை வெளியிடுவது பிரதமரின் கடமை. பௌத்த மதத்தை அழிக்கும் மையமாக புத்தசாசன அமைச்சு மாறியுள்ளது.

தனக்குக கீழ் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடத் தயங்கினால், பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை அவர் பாதுகாக்கக் கூடாது”

அதேவேளை , குறிப்பிட்ட போதைப்பொருள் கொள்கலனை விடுவிக்கக் கோரி கடிதம் கொடுக்கும்படி,  பிரதமரே தமக்குப் பணித்ததாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள அவரது இணைப்புச் செயலர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதக தெரிவிக்கப் படுக்கிறது

Previous post பொதுநலவாய மாநாட்டு கார்கள் அமைச்சர்களுக்கு
Next post நிகாப் தடையினால் பாதிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலை கழக மாணவி பாத்திமா ஸஹாரின் ஆதங்கம்