பிரதி அமைச்சர் ஹரீஸின் மூத்த சகோதரர் காலமானார்.

Read Time:54 Second

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் மூத்த சகோதரர் ஹபீப் முஹம்மது இஸ்ஸதீன் இன்று காலை திடீர் சுகயீனமுற்று களுவோவில வைத்தியசாலையில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

இவர் சாய்ந்தமருதில் திருமணமாகி தற்போது கொழும்பு களுவோவிலவில் வசித்து வந்தவர்.

இலங்கை வங்கியின் முகாமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். மூன்று பெண் பிள்ளைகளினதும், ஒரு ஆண் பிள்ளையினதும் தந்தையுமாவார். மரணிக்கும் போது அன்னாருக்கு 63 வயதாகும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்.

Previous post நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு: நாளை அமைச்சரவைப்பத்திரம்
Next post நமது மாணவர்களும் வளங்களை பெறும் நிலைமை உருவாகியுள்ளது -உதுமாலெப்பை –